ads

நரகாசூரன் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் கருத்து வேறுபாடு? ரிலீஸ் எப்போது?

ஒரு தயாரிப்பாளராக கவுதம் மேனன் நரகாசூரன் படத்திற்கு எந்த முதலீடும் செய்யவில்லை - கார்த்திக் நரேன்.

ஒரு தயாரிப்பாளராக கவுதம் மேனன் நரகாசூரன் படத்திற்கு எந்த முதலீடும் செய்யவில்லை - கார்த்திக் நரேன்.

வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் கார்த்திக் நரேன். தன்னுடைய முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 'துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு இவருடைய இரண்டாவது படமாக 'நரகாசூரன்' படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் நரேன், மற்ற படங்களை போன்று காதல், சண்டை, வில்லத்தனம் போன்றவை அல்லாமல் தன்னுடைய படத்தின் கதையை மாறுபட்ட கோணத்தில் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

இவருடைய இயக்கத்தில் தற்போது 'நரகாசூரன்' படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியானதை அடுத்து இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தினால் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் நரேன் "ஒருவர் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையால் சிதைக்கப்படுவீர்கள்.." என்று கருத்து பதிவு செய்தார்.

இதனால் திரைத்துறையில் சலசலப்பு ஏற்பட்டது. யாரை நம்பி ஏமாந்து போனார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். தற்போது இது குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் அளித்த விளக்கத்தில் "முதலில் நரகாசூரன் படத்தின் தயாரிப்பாளராக கவுதம் மேனன் சார் உறுதியான பிறகு முடிவை திருத்தி கொள்ள பலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் அவரை முன்மாதிரியாகவும், அவர் மீதுள்ள நம்பிக்கையினாலும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்த படத்தை கவுதம் சாரின் ஒன்றாக என்டேர்டைன்மெண்ட் தயாரித்துள்ளதாக சொல்கிறார்கள், ஆனால் இந்த படத்திற்காக எந்த முதலீடையும் செய்யவில்லை. நரகாசூரன் படத்துக்காக கடன் வாங்கி அதை, அவருடைய துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் செலவு செய்தார். இந்த படத்தில் முக்கிய பிரச்சனையாக இருப்பது நடிகர்களின் சம்பள பாக்கி தான். இதனால் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை நரகாசூரன் படத்திற்கு செலவு செய்து விட்டேன்.

இந்த படத்துக்காக "ஒன்றாக" எதையும் முதலீடு செய்யவில்லை, நானும், ஷ்ரத்தா என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பாளர் பத்ரி சாரும் தான் முதிலீடு செய்துள்ளோம். இது குறித்து கவுதம் சாருக்கு கால் செய்தாலும், மெசேஜ் செய்தாலும் எந்த பதிலும் இல்லை. தற்போது என்னுடைய பணம் முழுவதும் நரகாசூரன் படத்தில் செலவு செய்து விட்டேன். இதனால் என்னுடைய அடுத்த படமான 'நாடக மேடை' படத்தை துவங்க கூட பணம் இல்லை" என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கவுதம் மேனன் அளித்த விளக்கத்தில் "சினிமா துறையில் ஒவ்வொரு படமும் தாமதமாவதற்கு பல காரணங்கள் உள்ளது. தற்போது சினிமா துறையில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இதனால் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. சரியான தருணம் வரும் வரை காத்து கொண்டிருக்க வேண்டும். இளம் இயக்குனராக கார்த்திக் நரேன் தன்னுடைய இரண்டாவது படத்தில் களமிறங்கியுள்ளார்.

இவர் இன்னும் வளர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இதற்கு அவர் பொறுமையாக இருக்க வேண்டும். நானும் இந்த படத்தில் 9 கோடி முதலீடு செய்துள்ளேன். நடிகர் அரவிந்த் சாமி சம்பளம் மட்டும் கொடுக்க வேண்டியுள்ளது. அதை கொடுத்ததும் அவரும் டப்பிங் பேசி முடித்து விடுவார். முடிந்ததும் சரியான தருணம் அமைந்ததும் ரிலீஸ் செய்வோம். நான் மட்டுமில்லாமல் இந்த படத்திற்காக எனக்கு பணம் கொடுத்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களும் முடிவு செய்த பிறகு படத்தை இரண்டு மூன்று வாரம் வரை தியேட்டரில் ஓட நினைக்கிறேன்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை அவர் 10 படங்கள் நிறைவு செய்த பிறகு புரிந்து கொள்வார்" என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு இளம் இயக்குனரான கார்த்திக் நரேனின் ஆதங்கமும், திரைத்துறையில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் கவுதம் மேனனின் பதிலும் எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை?. இதனால் தற்போது இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது 

நரகாசூரன் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் கருத்து வேறுபாடு? ரிலீஸ் எப்போது?