ads

கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் அளித்த மனுவை தள்ளிப்படி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் அளித்த மனுவை தள்ளிப்படி செய்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கடந்த 2014-இல் வெளிவந்த அனிமேஷன் படம் 'கோச்சடையான்'. இந்த படத்தை தயாரிப்பதற்காக லதா ரஜினிகாந்த், ஆட்பீரோ என்ற நிறுவனத்திடமிருந்து 10 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடனில் ஒன்றரை கோடியை மட்டுமே திருப்பி செலுத்தியுள்ளார். மீதமுள்ள 8½ கோடியை திருப்பி செலுத்த கோரி ஆட்பீரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீதமுள்ள பணத்தை 18 வாரங்களில் (ஜூலை 3ஆம் தேதிக்குள்) திருப்பி செலுத்துமாறும், மீடியா ஒன் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் பணத்தை செலுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் லதா ரஜினிகாந்த் மொத்தம் 10 கோடியில் 9.20 கோடியை திருப்பி செலுத்தி விட்டார்.  

மீதமுள்ள 80 லட்ச ரூபாயை திருப்பி செலுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மீதமுள்ள பணத்தை ஜூலை 3-ஆம் தேதிக்குள் உடனடியாக திருப்பி செலுத்திவிடவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்