ads

கொடி வீரன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி

kodi veeran movie new release date

kodi veeran movie new release date

 சசிகுமார் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கொடிவீரன்'. சசிகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி ப்ரொடக்சன் சார்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா, விதார்த், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குட்டிப்புலி படத்திற்கு பிறகு சசிகுமார், இயக்குனர் முத்தையா கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடித்துள்ளார். 

ஆக்சன், காமெடி, வீரம் போன்று கமர்சியல் படமாக இந்த படம்  உருவாகியுள்ளது. இந்த படத்தில் அண்ணன் தங்கச்சி பாசம் ரசிகர்களிடையே பேசப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 30 என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிபோகியுள்ளது. படத்தை டிசம்பர் 7-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. 

கொடி வீரன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி