ads
'அருவி' ஒரு சுட்ட படம் - லட்சுமி ராமகிருஷ்ணன்
வேலுசாமி (Author) Published Date : Dec 19, 2017 14:50 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் அறிமுக நாயகி அதிதி பாலன் நடிப்பில் 'அருவி' படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர். இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்தது. இதனை அடுத்து வெளிவந்த போஸ்டர்ஸ் மற்றும் டீசர், ட்ரைலர் போன்றவை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது.
படத்தை பார்த்த ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற ஏராளமானோர் இந்த படத்திற்கு தற்போதுவரை பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் கடந்த 2011-இல் வெளிவந்த 'ஆஸ்மா' என்ற எகிப்தியன் படத்திலிருந்து காப்பி அடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது நடிகை மற்றும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் "இந்த செய்தி வேதனை அளிக்கிறது. அருவி படம் திருடப்பட்ட கதையா?. தங்களது திறமையை கதையை திருடுவதில் காட்டுவதா?..கதையை திருடி பணம், புகழை சம்பாதிக்கின்றனர்." என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Very disappointing , is it a stolen idea?!! Sad if it is 👎👎👎👎our talents have to resort to plagiarism and personal attacks & defaming of colleagues for sake of money and fame😠https://t.co/HRMMFZYM6P
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) December 19, 2017