ads

அருவி படத்தை பாராட்டிய பிரபலங்கள்

Aruvi heroine Tamil Actress Aditi Balan

Aruvi heroine Tamil Actress Aditi Balan

இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் அறிமுக நாயகி அதிதி பாலன் நடிப்பில் 'அருவி' படம் வெளியானது. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பாபு ஆகியோர் இணைந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர். இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்தது. இதனை அடுத்து வெளிவந்த போஸ்டர்ஸ் மற்றும் டீசர் ட்ரைலர் போன்றவை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று தந்தது. இந்த படம் நேற்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் இந்த படத்திற்க்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த படத்தை பார்த்த நடிகர் கார்த்தி, விஷ்ணு விஷால், சிவகார்த்திகேயன்,  இயக்குனர் ஆனந்த் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், 'விக்ரம் வேதா' இயக்குனர் புஷ்கர்-காயத்ரி, நடிகர் ஆர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் அரவிந் சாமி, இயக்குனர் நடிகர் கருணாகரன், இயக்குனர் அஹ்மத் ஆகியோர் தனது சமூக வலைத்தளங்களில் "அருவி படம் நடிப்பு, காமெடி, ஒளிப்பதிவு, இயக்கம் போன்ற அனைத்திலும் சிறந்த முறையில் வெளிவந்துள்ளது. நாயகியாக நடித்துள்ள அதிதி பாலன் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் நிச்சயமாக இந்த ஆண்டின் சிறந்த படமாக விளங்கும்." என்று தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் "அருவி படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்களது ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளது.

அருவி படத்தை பாராட்டிய பிரபலங்கள்