ads
தனுஷ் இயக்கத்தில் தேசிய விருது கலைஞர்
மோகன்ராஜ் (Author) Published Date : Jan 10, 2018 11:10 ISTபொழுதுபோக்கு
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா','வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை', பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2', கென் ஸ்காட் இயக்கத்தில் ஹாலிவுட் படமான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ், துரை செந்தில் குமார் இயக்கவிருக்கும் புதிய படங்கள் என இந்தாண்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் படப்பிடிப்புகள் இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் மற்றொரு புது படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த புது படத்தினை தனுஷே இயக்கவிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளிவந்தது.
தனுஷ் கடந்த நாட்களில் தனது 37வது படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி – ஹேமா ருக்மணி இணைந்து தயாரிக்க இருப்பதாக அவரே தனது ட்விட்டர் மூலம் தகவலை வெளியிட்டிருந்தார். அதிகளவு பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தில் கலை இயக்குனராக லால்குடி இளையராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் சிறந்த கலை இயக்குனருக்கு தேசிய விருது பெற்றிருப்பது குறிப்பிட்ட தக்கது. இன்னும் சில நாட்களில் படத்தின் டைட்டில், நாயகி, இதர நடிகர் - நடிகைகள் பற்றிய தகவலை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.