சூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்

       பதிவு : Mar 27, 2018 11:58 IST    
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் இணையவுள்ள நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் இணையவுள்ள நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் மற்றும் சினிமா போன்ற இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இமயமலை சென்று திரும்பியுள்ள ரஜினி, அவர் நடிக்க உள்ள புது படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார். இளம் இயக்குனரான இவர் பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றி படங்களை இயக்கி உள்ளார். இவருடைய இயக்கத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு 'மெர்குரி' படம் உருவாகியுள்ளது.

சைலன்ட் த்ரில்லர் படமான மெர்குரி வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்க உள்ளார். தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்து வந்த ரஜினி தற்போது இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார். இதன்படி தற்போது அவர் நடிக்க உள்ள புது படத்திற்கு இயக்குனராக கார்த்திக் சுப்பராஜும், இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகிகள் குறித்த தகவல் வெளியான நிலையில் தற்போது முன்னணி நாயகிகள் தீபிகா படுகோனே, த்ரிஷா, அஞ்சலி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படத்தில் நடித்துள்ளார்.

நடிகை த்ரிஷா, சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பது தனது வாழ்நாள் கனவு என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை அஞ்சலி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'இறைவி' படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அஞ்சலி நடிப்பது உறுதியானால் கார்த்திக் சுப்பராஜுடன் இரண்டாவது முறையாகவும், சூப்பர் ஸ்டாருடன் முதல் முறையாகவும் இணைய உள்ளார். 

 


சூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்