ads

சூப்பர் ஸ்டாரின் காலா படத்துடன் மோதும் விஸ்வரூபம் 2

kaala vishwaroopam 2 movies released on april

kaala vishwaroopam 2 movies released on april

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ‘விஸ்வரூபம் 2’ படம் 5 வருடங்களாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகமான 'விஸ்வரூபம்' தயாரான போதே படமாக்கப்பட்டது. தயாரிப்பாளர் காரணங்களால் அந்த பொறுப்பை தாமே ஏற்று நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகளை நிறைவு செய்தார். தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள், ரீரிக்கார்டிங் போன்றவை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்க தொழில் நுட்பத்தில் ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் தற்போது நடந்து வருகிறது. நாளுக்கு நாள் 'விஸ்வரூபம் 2' படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0'  படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் ஏப்ரலில் வெளியாக இருந்த '2.0' தள்ளி போனது. அதனால் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தனது 'காலா' படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டில் களமிறக்கியுள்ளார்.

இதன் மூலம் 'காலா' படத்துடன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' மோத உள்ளது. இந்த படத்தில் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தில் உளவுத்துறை அதிகாரியாக களமிறங்கியுள்ளார். கடந்த முதல் பாகத்தில் அமெரிக்காவில் குண்டு வெடிப்பு நாச வேலைகளை நடத்த திட்டமிடும் தீவிரவாதிகளின் சதியை கமல்ஹாசன் முறியடிப்பதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் இறுதியில் கமல்ஹாசனிடம் சிக்காமல் தீவிரவாதிகளின் தலைவன் விமானத்தில் தப்பி செல்வதுபோல் கதை முடிந்தது.

இந்த தலைவன் இரண்டாம் பாகத்தில் மீண்டும் தனது சதிவேலைகளை தொடங்குகிறார். இதனை மீண்டும் கமல்ஹாசன் தடுத்து பயங்கரவாதிகளை எப்படி அழிக்கிறார் போன்ற காட்சிகளை இரண்டாம் பாகத்தின் கதையாக தயாராகியுள்ளது. இந்த படத்தை விரைவில் தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி சான்றிதழ் பெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த படம் தமிழ், இந்தி போன்ற மொழிகளில் தயாராகி வருகிறது. தமிழில் 'விஸ்வரூபம் 2' என்ற தலைப்பிலும், இந்தியில் 'விஸ்வரூப் 2' என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது. விரைவில் அரசியல் களத்தில் மோதவுள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் தற்போது தமிழ் புத்தாண்டில் மோத உள்ளது.

சூப்பர் ஸ்டாரின் காலா படத்துடன் மோதும் விஸ்வரூபம் 2