அமெரிக்காவில் நடந்து முடிந்த 'விஸ்வரூபம் 2' சவுண்ட் டிராக்

       பதிவு : Dec 22, 2017 13:29 IST    
vishwaroopam 2 movie latest news vishwaroopam 2 movie latest news

நடிகர் கமல் ஹாசன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் படம் 'விஸ்வரூபம் 2'. கடந்த 2013-ஆம் ஆண்டு 'விஸ்வரூபம்' முதல் பாகம் வெளியானது. இதனை தொடர்ந்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை விஸ்வரூபம் இயக்கும் போதே சில காட்சிகளை கமல்ஹாசன் இயக்கியுள்ளார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இதனை அடுத்து 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை குறிப்பிட்ட தொகையை கொடுத்து கமல் ஹாசன் வாங்கி படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளை தொடர்ந்தார். 

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேலையில் அரசியலில் கவனத்தை திருப்பினார். 'விஸ்வரூபம் 2' இப்போதைக்கு வராது என்று ரசிகர்கள் நினைத்திருக்கும் வேலையில் சென்னையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார். இந்த படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்திற்குஜிப்ரான் இசையமைக்கிறார். 

 

இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் படப்பிடிப்பின் போது ராணுவ உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. பின்னர் இந்த படத்தின் சவுண்ட் டிராக்குக்காக அமெரிக்கா சென்றிருந்தார். இதனை அடுத்து பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கும் தருணத்தில் தற்போது இந்த படத்தின் மீதான தகவலை கமல் ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். "விஸ்வரூபம் 2 படத்தின் சவுண்ட் டிராக் மிக சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் நடந்து முடிந்த 'விஸ்வரூபம் 2' சவுண்ட் டிராக்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்