ads

'இந்தியன் 2' படத்தின் புதுவித தகவல்

indian 2 movie updates

indian 2 movie updates

'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய சங்கர் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார்.

இயக்குனர் சங்கர் தற்பொழுது 2.0 படத்தின் படப்பிடிப்பை முடித்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரி 25ல் வெளியிட உள்ளனர். இதனை அடுத்து இயக்குனர் சங்கர் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் துவக்கவிருப்பதாகவும் படத்தின்  அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்து 2019ம் ஆண்டில் படத்தினை  வெளியிடுவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

மேலும் இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் படத்தின் கலை இயக்குனராக டி.முத்துராஜ் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்திற்கு முன்னதாகவே சங்கர் இயக்கியுள்ள நண்பன், ஐ, 2.0 போன்ற படங்களில் டி.முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த கூட்டணி நான்காவது முறையாக இணையவுள்ளது . 

'இந்தியன் 2' படத்தின் புதுவித தகவல்