ads
விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தில் வில்லனான இயக்குனர் மகேந்திரன்
வேலுசாமி (Author) Published Date : Jul 25, 2018 17:58 ISTபொழுதுபோக்கு
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் செக்க சிவந்த வானம், ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், இடம் பொருள் ஏவல் மற்றும் ஷாயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜூங்கா' படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நடுவுல 'கொஞ்சம் பக்கத்த கானோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'சீதக்காதி' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் 80 வயது முதியவராக அய்யா கதாபாத்திரத்திலும், இளம் நாயகனாக குமார் என்ற கதாபாத்திரத்திலும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மலையாள நடிகை பார்வதி, அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் தற்போது நடிகர் மற்றும் இயக்குனரான பாரதி ராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
இது தவிர 'தெறி' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான பிரபல இயக்குனர் மகேந்திரன் அவர்கள் இந்த படத்தின் மெயின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் விடியோவை சூப்பர் சிங்கர் பைனலில் படக்குழு வெளியிட்டது. மேலும் இந்த படம் விஜய் சேதுபதியின் 25வது படமாகும். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க மலையாள இசையமைப்பாளரான கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.