ads

மலையாள முன்னணி நடிகருடன் இணையும் மகிமா நம்பியார்

magima nambiar in mammootty film

magima nambiar in mammootty film

சாட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மகிமா நம்பியார் மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், போன்ற பல படங்களில் நடித்ததனை தொடர்ந்து  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரவி அரசு இயக்கிய  ‘ஐங்கரன்’, மு.மாரன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் சசிகுமார் நடிப்பில் வெளிவர உள்ள 'கொடிவீரன்' படத்திலும் நடித்துள்ளார்.  

அதனை தொடர்ந்து மகிமா நம்பியார் மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான மம்மூட்டியுடன்  ‘மாஸ்டர் பீஸ்’ படத்தின் மூலம் முதல் முதலாக இணைந்துள்ளார். அஜய்வாசுதேவ் இயக்கி வரும் இப்படத்தில் மகிமா கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் நடைபெற்று வருகிறது. மம்முட்டி, மகிமாவுடன் இணைந்து பூனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் இப்படத்தினை அடுத்த மாதம் வெளியிடுவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். 

மலையாள முன்னணி நடிகருடன் இணையும் மகிமா நம்பியார்