நடிகர் மம்முட்டியின் யாத்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

       பதிவு : Apr 07, 2018 17:55 IST    
நடிகர் மம்முட்டியின் யாத்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் மம்முட்டியின் யாத்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் மம்முட்டி நடிப்பில் தற்போது 'பரோல்' படம் வெளியாகியுள்ளது. மக்களுக்காக போராட்டத்தில் களமிறங்கி சிறைச்சாலை அனுபவிக்கும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இயக்குனர் சரத் சந்தீப் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இனியா, மியா, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து மம்முட்டி பேரன்பு, யாத்ரா, மாமாங்கம், அங்கிள், ஒரு குட்டன்டன் பையாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இதில் இயக்குனர் மஹி ராகவ் இயக்கத்தில் உருவாகி வரும் 'யாத்ரா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மறைந்த ஆந்திர முதலமைச்சரான ஒய்எஸ்.ராஜசேகர ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவியதாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்.

 

மேலும் இந்த படத்தில் மம்முட்டிக்கு மருமகள் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தை சிவ மெகா மற்றும் 70MM என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் விஜய் சில்லா மற்றும் சசி தேவிரெட்டி ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

ஆந்திர முதலமைச்சர் பையோபிக் படமான யாத்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்.ஆந்திர முதலமைச்சர் பையோபிக் படமான யாத்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

நடிகர் மம்முட்டியின் யாத்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்