ads

விமலின் மன்னர் வகையறா படத்தின் புது பாடல்

mannar vagera new video release

mannar vagera new video release

இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில், அரசு ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் என் விமல் தயாரித்துள்ள படம்  'மன்னர் வகையறா'. இந்த படத்தில் அதிரடியில் களமிறங்கியுள்ள விமலுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, சாந்தினி தமிழரசன் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி போன்ற திரைப்பட வட்டாரங்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் ஒரு சிறிய காட்சியில் பிக் பாஸ் ஜூலி நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் ஈடுபட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் விமலின் மிரளவைக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதினை தொடர்ந்து கடந்த 25ம் தேதி படத்தின் டீசர் வெளியிட்டனர். அதில் விமலின் காதல், நகைசுவை, அதிரவைக்கும் சண்டை காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசையை 30-ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்து, கடந்த நாட்களில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று படத்தில் பணியாற்றியது குறித்து சுவாரஸ்யமாக உரையாடினார். மேலும் இந்த விழாவில் இந்த படத்தின் மூன்று பாடல்கள் திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து 'Annanapathi kavaleilla' என்ற புது பாடலை விரைவில் வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் குடியரசு தின பட்டியலில் இணைந்திருப்பது குறிப்பிட தக்கது.    

விமலின் மன்னர் வகையறா படத்தின் புது பாடல்