ads
நல்ல விலைக்கு கைமாறிய விமல், அரவிந் சாமி படங்கள்
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 09, 2017 18:23 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மன்னர் வகையறா'. இந்த படத்தில் விமல், கயல் ஆனந்தி, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக், சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசு பிலிம்ஸ் சார்பில் என்.விமல் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமையவுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந் சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சதுரங்க வேட்டை 2'. இந்த படத்தில் அரவிந் சாமிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை மனோபாலா பிக்ச்சர்ஸ் அவுஸ் சார்பில் மனோபாலா தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை சினிமா சிட்டி நிறுவனம் வாங்கியுள்ளது.