ads

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' இசை விரைவில்

baskar oru rascal movie audio soon

baskar oru rascal movie audio soon

சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகிவரும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.இவர்களுடன் இணைந்து சித்திக், சூரி, ரோபோ சங்கர், நாராயண லுக்கி, ரமேஷ் கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். காமெடிகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.  

இப்படம் மலையாள படத்தின் ரீ - மேக்.  இயக்குனர் சித்திக் இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. தற்பொழுது இப்படத்தினை தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர்.   

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக இறங்கியுள்ளது. படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் இசை மிக விரைவில் வெளியிடுவதாக படக்குழு தகவலை தெரிவித்துள்ளது.        

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' இசை விரைவில்