அக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து

       பதிவு : Apr 25, 2018 14:49 IST    
கேசரி படப்பிடிப்பின் போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்ட செட் நாசமாகியுள்ளது. கேசரி படப்பிடிப்பின் போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்ட செட் நாசமாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 'பத்மன்' படத்திற்கு பிறகு  இவருடைய நடிப்பில் சூப்பர் ஸ்டாரின் 2.0 மற்றும் ஹந்தியில் கோல்ட், மொகுள், கேசரி, அவுஸ் புள் 4 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் அனுராக் சிங் இயக்கி வரும் 'கேசரி' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது மஹாராஷ்டிராவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அக்ஷய் குமார் அவில்தார் இஷ்தார் சிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் 'பேட்டில் ஆப் சரகர்ஹி (Battle of Saragarhi)' 1897-ஆம் ஆண்டில் 10,000 ஆப்கானிஸ்தான் வீரர்களை எதிர்த்து போராடிய 21 சீக்கியர்களை பற்றிய கதையாக உருவாகி வருகிறது. இந்த அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடிகை பரினீதி சோப்ரா ஈஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்க உள்ளதாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

சிறியதாக பரவிய தீ சற்று நேரத்திற்குள் அந்த இடம் முழுக்க வெகுவாக பரவ ஆரம்பித்துவிட்டது. இதனால் இந்த படப்பிடிப்பிற்காக மிகுந்த பொருட்செலவில் போடப்பட்ட செட்டும் தீயில் கருகி நாசமாகியது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இருந்த நிலையில் ஏற்பட்ட இந்த தீயால் படக்குழுவினர் மீண்டும் அந்த செட்டை வடிவமைக்க உள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஹோலி பண்டிகையில் வெளிவரவுள்ளது.


அக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்