விஜய்யின் ஆளப்போறான் தமிழன் டைட்டில்

       பதிவு : Nov 29, 2017 18:20 IST    
vijay 62 movie titile vijay 62 movie titile

தெறி படத்தினை தொடர்ந்து அட்லீ இயக்கிய 'மெர்சல்' படத்திற்கு மாபெரும் வெற்றி பெற்றது. மூன்று வேடங்களில் விஜய்யின் நடிப்பு, ஜி.எஸ்.டி மற்றும் இலவச மருத்துவம் சம்பந்தப்பட்ட வசனம் ரசிகர்கள் மத்தியில் தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.     

இந்நிலையில் துப்பாக்கி, கத்தி படங்களை இயக்கிய ஏஆர். முருகதாஸ் விஜய்யின் 62வது படத்தினை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு துவங்கவிருக்கிறது. இந்த படத்தினை அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் மெர்சல் 2 படத்தில் விஜய் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.  

 

மேலும் மெர்சல் 2 படத்திற்கு 'ஆளப்போறான் தமிழன்' மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரியில் டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த செய்தி வெளிவந்ததிலிருந்து விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி வருகின்றனர். மெர்சல் 2 படத்திற்கான தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    


விஜய்யின் ஆளப்போறான் தமிழன் டைட்டில்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்