ads

'மெர்சல்' பட இயக்குனர் அட்லீக்கு நோட்டீஸ்

'மெர்சல்' பட இயக்குனர் அட்லீக்கு நோட்டீஸ்

'மெர்சல்' பட இயக்குனர் அட்லீக்கு நோட்டீஸ்

இயக்குனர் அட்லீ எடுக்கும் படங்கள் காப்பியடிப்பதை போன்று இருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் திரைப்படத்துறையினரும் விமர்சித்து வந்தனர். 2013-ஆம் ஆண்டு வெளிவந்த 'ராஜா ராணி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனைவருக்கும் இந்த படம் முக்கிய படமாக இருந்தது. ஆனாலும் இந்த படம் 'மெளனராகம்' படத்தை காப்பியடித்ததாக பலர் விமர்சித்தனர். இதனை இயக்குனர் அட்லீ பெரிதும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு படத்தை காப்பியடித்தால் தான் பிரச்சனை இரண்டு, மூன்று படங்களை காப்பியடித்தால் பிரச்னை ஏதும் ஏற்படாது என்று மூன்று முகம், அபூர்வnotr சகோதரர்கள் போன்ற படங்களை காப்பியடித்து மெர்சல் படத்தை தழுவியதாக பலர் விமர்சித்தனர். இந்த 'மெர்சல்' படத்தை நடிகர் கமலுக்கு காண்பித்து சமீபத்தில் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இந்த புகைப்படத்தின் பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் படம் இருந்தது. இதனால் மெர்சல் படத்தை சத்தமில்லாமல் கேலி செய்ததாக கமல் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

இதனால் மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள 5ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனம் திரைப்பட சங்கத்தில் மூன்று முகம் படத்தை காப்பி அடித்ததாக புகார் தெரிவித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் அட்லீக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'மெர்சல்' பட இயக்குனர் அட்லீக்கு நோட்டீஸ்