மெர்சல் வெற்றியை துபாயில் கொண்டாடியதற்கு காரணம் இதுவோ!

       பதிவு : Nov 14, 2017 16:08 IST    
மெர்சல் வெற்றியை துபாயில் கொண்டாடியதற்கு காரணம் இதுவோ!

விஜய் நடிப்பில் தீபாளிக்கு வெளிவந்த மெர்சல் படத்திற்கு அதிகளவு வரவேற்புகள் இன்னும் கிடைத்து வருகிறது. இப்படத்தில் அரசுக்கு மாறாக ஜி எஸ் டி மற்றும் சில வசனங்கள் இடம் பெற்றதின் காரணத்தினால் பல எதிர்ப்புகள் இருந்தும் குறிப்பிட்ட தேதியில் படத்தினை வெளிட்டு மாபெரும் வெற்றியை பெற்றனர்.    

விஜய் மூன்று வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, எஸ்ஜே. சூர்யா, கோவை சரளா என பல வட்டாரங்கள் நடித்திருந்தனர். மேலும் தெலுங்கில் அதிரந்தி என்ற தலைப்பில் வெளியிட்டு தமிழை போன்று பல மடங்கு வெற்றியை தந்துள்ளது. 200 கோடிக்கு மேலாக வசூலை தந்திருப்பதை கொண்டாடும் வகையில் துபாய்க்கு விஜய், அட்லீ, உள்ளிட்ட படக்குழுவினர்களில் சிலர் சென்றுள்ளனர்.        

 

மேலும் அங்கு சென்றிருப்பதை உறுதி படுத்தும் வகையில் துபாயில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இணையதளத்தல் வெளியிட்டுள்ளனர். தற்பொழுது இந்த புகைப்படம் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  

தமிழில் வெளிவந்த நிலையில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து விஜய், மெர்சல் படக்குழுவினரிடம் சேர்ந்து சென்னையில் வெற்றியை கொண்டாடினர். படத்திற்கு தான் சர்ச்சையை எழுப்புனாங்கன்னா, மக்கள் மழையில் தவிக்கும் போது இந்த கொண்டாட்டம் தேவையா! என்று வெற்றியை கொண்டாடியதற்கும் சர்ச்சையை எழுப்பினார்கள்.  

 

இதன் காரணத்தினால் துபாய் சென்று விஜய் வெற்றியை கொண்டாடுவாரோ என எதிர்பார்க்கப்படுகிறது.  
 


மெர்சல் வெற்றியை துபாயில் கொண்டாடியதற்கு காரணம் இதுவோ!


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்