50 கோடி வசூலை தாண்டிய மோகன்லால் மகன் பிரணவ்வின் முதல் படம்

       பதிவு : Apr 17, 2018 18:18 IST    
நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் தன்னுடைய முதல் படத்திலே 50 கோடி வசூலை தாண்டியுள்ளார். நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் தன்னுடைய முதல் படத்திலே 50 கோடி வசூலை தாண்டியுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி வெளியான படம் 'ஆதி'. இந்த படம் பிரணவ் மோகன்லால் நாயகனாக நடித்து வெளிவந்த முதல் படம். இதற்கு முன்னதாக பிரணவ், குழந்தை நட்சத்திரமாகவும், பாபநாசம், லைப் ஆப் ஜோசுட்டி போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இதன் பிறகு மலையாள திரையுலகிற்கு ஒரு நாயகனாக 'ஆதி' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை மோகன்லாலின் 'திரிஷ்யம்' படத்தை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'லக்ஷ்யம்' படத்திற்கு பிறகு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்து 100 நாட்களை நெருங்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரணவ், தன்னுடைய முதல் படத்திலே பெரும் சிகரத்தை அடைந்துள்ளார்.

 

மலையாள நடிகர்கள் எவருக்கும் தன்னுடைய முதல் படம் இந்த அளவிற்கு வசூல் சாதனையும், 100 நாட்களை கடந்தும் ஓடியதில்லை. இந்த படம் ஆசீர்வாத சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து கேரளா சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த படத்தில் அதிதி ரவி, அனுஸ்ரீ, ஜெகபதி பாபு, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வசூலில் 50 கோடியை தொட்டு சாதனை படைத்துள்ளது.


50 கோடி வசூலை தாண்டிய மோகன்லால் மகன் பிரணவ்வின் முதல் படம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்