ads

மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

mr chandramouli movie released on april 27th

mr chandramouli movie released on april 27th

'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் திரு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இவர் முன்னதாக சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த மூன்று படங்களிலும் நடிகர் விஷால் நாயகனாக நடித்துள்ளார். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கெளதம் கார்த்திக் தந்தை நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் அப்பா, மகன் இருவரும் முதன் முறையாக இணைகின்றனர்.

இவர்களுடன் ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சதிஷ், இயக்குனர் மகேந்திரன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இயக்குனர் திருவின் மாமனார் அகத்தியன் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படம் வரும் மார்ச் மாதம் 27-ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்து புது போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

mr chandramouli movie released on april 27thmr chandramouli movie released on april 27th
mr chandramouli movie released on april 27thmr chandramouli movie released on april 27th

மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு