ads

வைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்

இசையமைப்பாளரான அனிருத்தின் லேடி கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளரான அனிருத்தின் லேடி கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் இறுதியாக வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகி சக்க போடு போட்டது. இதனை தொடர்ந்து இவர் கோலமாவு கோகிலா மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ள புது படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் கோலமாவு கோகிலா படத்தில் இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இசையமைப்பாளரான அனிருத், லேடி கெட்டப் போட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அச்சு அசல் லேடியாகவே மாறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு எதற்காக, விளம்பரத்தில் நடிக்கிறாரா அல்லது கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க உள்ள தோற்றமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறைத்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளரான அனிருத்தின் லேடி கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.இசையமைப்பாளரான அனிருத்தின் லேடி கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்