காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு அனிருத்தின் சர்ப்ரைஸ்

       பதிவு : Feb 06, 2018 16:12 IST    
anirudh surprise at valentines day february 14th anirudh surprise at valentines day february 14th

இசையமைப்பாளர் மற்றும் பாடகரான அனிருத் காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக அவரது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அது எந்த மாதிரியான சர்ப்ரைஸாக இருக்கும் என்று ரசிகர்கள் அவர்களின் எண்ணத்திற்கேற்ப தெரிவித்து வருகின்றனர். இவருடைய இசையமைப்பில் இறுதியாக சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படமும், பவன் கல்யாணின் 'அங்யாதவாசி' படமும் வெளியாகி அனிருத்தின் இசையில் சக்க போடு போட்டது. இதில் பவன் கல்யாணின் 'அங்யாதவாசி' படம் இவர் தெலுங்கில் அறிமுகமான முதல் படமாகும்.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கேற்ப தற்போது தெலுங்கிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது தல அஜித்தின் 58வது படமாக உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் தெலுங்கில் நடிகர் என்டிஆரின் 28வது படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார்.

 

ஒரு பாடகராக சமீபத்தில் இவருக்கு 'கருத்தவெல்லாம் கலீஜாம்' பாடலுக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் 'யாஞ்சி யாஞ்சி' பாடலுக்கும் ஆனந்த விகடன் விருதுகள் கிடைத்தது. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் தனது இசையமைப்பில் 12 விடியோவை ஆல்பமாக பதிவு செய்துள்ளார். ஆக, காதலர் தினத்தன்று இவருடைய சர்ப்ரைஸ், தற்போது இசையமைத்து வரும் தல மற்றும் என்டிஆர் படங்களின் அப்டேட்டாக இருக்கலாம் அல்லது இசை சார்ந்ததாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

anirudh surprise at valentines day february 14thanirudh surprise at valentines day february 14th

காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு அனிருத்தின் சர்ப்ரைஸ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்