விஜய் தேவரகொண்டாவின் புது படத்திற்கு இசையமைக்கும் மதுரை இசையமைப்பாளர்

       பதிவு : Mar 31, 2018 17:32 IST    
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் புதுப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் புதுப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் திரையுலகில் மிகவும் மாணவர். இந்த படம் தற்போது தமிழில் 'வர்மா' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதன் பிறகு விஜய் தேவரகொண்டா தமிழில் 'நோட்டா' என்ற படத்திலும், தெலுங்கில் "டேக்சிவாளா" என்ற படத்திலும் நடித்து வருகிறது. இதனை அடுத்து தற்போது விஜய் தேவரகொண்டா புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு மதுரையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளை தொடர்ந்து தெலுங்கில் தனது இசை பயணத்தை துவங்குகிறார். இது குறித்து இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கூறுகையில் "நான் தெலுங்கில் அறிமுகமாகவுள்ள முதல் படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க உள்ளார். இளம் ரசிகர்களிடம் அவருக்கு இருக்கும் வரவேற்புகள் எண்ணில் அடங்காதவை.

 

இவருடைய படத்தில் நான் தெலுங்கில் அறிமுகமாவது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த படத்தின் இயக்குனர் என்னுடைய நீண்ட கால நண்பர். அவருடன் இணைந்து 'மரோ பிரபஞ்சம்' என்ற குறும்படத்தில் பணியாற்றியுள்ளோம். தற்போது இந்த படத்திற்கான இசைப்பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளோம். தமிழ், மலையாளத்தில் அறிமுகமாகிவிட்டேன். இதன் பிறகு தெலுங்கில் அறிமுகமாவது எனக்கு கிடைத்த பெருமை." என்று தெரிவித்துள்ளார். 


விஜய் தேவரகொண்டாவின் புது படத்திற்கு இசையமைக்கும் மதுரை இசையமைப்பாளர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்