ads

நகுலின் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

bramma dot com movie

bramma dot com movie

நகுல் நடிப்பில் தற்பொழுது உருவாக்கி கொண்டிருக்கும் படம் 'பிரம்மா.காம்'. இப்படத்தினை புதுமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் நகுல் அதிரடி கலந்த காமெடியில் இறங்கி இருப்பதாக தெரிகிறது. நகுலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கும் இப்படத்தில் சித்தார்த் விபின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் இப்படத்தில் இசையமைக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் இணைந்து ராஜேந்திரன், சுமிதா ஹசாரிக்கா, பாக்கியராஜ், நீடு சந்திரா, ஜெகன் என பலர் நடித்துள்ளனர்.    

படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களுக்கிடையில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்து. இந்நிலையில் படத்திற்கு எந்த வித காட்சியையும் கட் செய்யாமல் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் படத்தினை வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியிட உள்ளனர்.        

நகுலின் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்