ads

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ள நவாசுதீன் சித்திக்

பிரபல ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.

ரஜினி நடிப்பில் 'கபாலி' படத்திற்கு பிறகு காலா, 2.0 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காலா' படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது நிலவி வரும் தயாரிப்பாளர் போராட்டம் நீடித்தால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதன் பிறகு ரஜினி நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படத்தின் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் தாமதமாகி கொண்டே வருகிறது. ஆனால் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தின் வெளியீடு தேதியும் இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் அனிருத் இசையமைப்பில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்திலும், சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாகவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதன் பிறகு இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, அஞ்சலி மற்றும் த்ரிஷா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடபதப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் என்பவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் நவாசுதீன் சித்திக் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராவார். 43 வயதான இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 19 வருடங்களாக திரைத்துறையில் நடிகராக, தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது வரை 56 படங்கள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் அணில் சர்மா இயக்கி வரும் 'ஜீனியஸ்'  படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணைய உள்ளார். சமீபத்தில் மும்பை சென்றிருந்த கார்த்திக் சுப்பராஜ், நவாசுதீன் சித்திக்கிடம் கதை கூறியுள்ளார். இவர் நடிப்பது உறுதியானால் இந்த படத்தில் நடிக்க உள்ள வில்லன்களில் ஒருவராக நடிக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ள நவாசுதீன் சித்திக்