புதிய நியமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் விளம்பர தயாரிப்பாளருடன் இணைந்த நயன்தாரா

       பதிவு : Apr 17, 2018 11:27 IST    
நடிகை நயன்தாரா விளம்பர தயாரிப்பாளர் மகேஷ் வெட்டியார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நடிகை நயன்தாரா விளம்பர தயாரிப்பாளர் மகேஷ் வெட்டியார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மலையாள நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, சயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 17 வருடங்களாக முன்னணி நாயகியாக ஆட்சி செய்து வருகிறார். தனது வாழ்க்கையில் அனைத்து சுக துக்கங்களையும் சந்தித்து களைத்துப்போன இவர் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து,பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதனால் தற்போது இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது. இவருடைய நடிப்பில் மலையாளத்தில் இறுதியாக வெளியான படம் 'புதிய நியமம்'. இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வரும் இவர் மலையாளத்திலும் அவ்வப்போது நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் மலையாளத்திலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் வெற்றியடைந்து விருதுகளை குவித்து வருகிறது.

 

'புதிய நியமம்' படத்திற்கு பிறகு மலையாளத்தில் விளம்பர தயாரிப்பாளரான மகேஷ் வெட்டியார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 'கொட்டையம் குர்பானா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படமும் நாயகிக்கு முக்கியத்தும் அளிக்கும் அழுத்தமான கதாபாத்திரம் கொண்டதாக உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு மது நீலகண்டன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மேலும் நயன்தாரா மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகவுள்ள 'லவ் ஆக்சன் டிராமா' படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


புதிய நியமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் விளம்பர தயாரிப்பாளருடன் இணைந்த நயன்தாரா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்