ads

புதிய படங்கள் வெளியாகாததால் வெளிவரும் நயன்தாராவின் வாசுகி

தயாரிப்பாளர் பிரச்சனையால் புதிய படங்கள் வெளியாகாததால் தற்போது நயன்தாராவின் தமிழ் டப் படமான வாசுகி நாளை முதல் வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளர் பிரச்சனையால் புதிய படங்கள் வெளியாகாததால் தற்போது நயன்தாராவின் தமிழ் டப் படமான வாசுகி நாளை முதல் வெளியாகவுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் இறுதியாக அறம், வேலைக்காரன் போன்ற படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நயன்தாரா தற்போது கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் மற்றும் சயிரா படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் பழைய படங்களையும், டப்பிங் படங்களையும் மட்டுமே தியேட்டர்களில் ஒளிபரப்ப செய்கின்றனர்.

இதனால் ரசிகர்கள் கூட்டம் போதிய அளவில் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாயில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தனது நடிப்பால் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. இதனால் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் தற்போது  புதிய படங்கள் வெளியாகாததால் நயன்தாராவின் 'வாசுகி' படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படம் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் நாளை வெளியாகிறது 

இந்த படம் மலையாளத்தில் வெளியான 'புதிய நியமம்' என்ற படத்தை 'வாசுகி' என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியிட்டனர். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற படம். இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்தது. இந்த படம் தன்னை கற்பழித்த மூன்று அரக்கர்களை பழி வாங்கும் கதையாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் மம்மூட்டி, நயன்தாரா மற்றும் ஷீலூ இப்ராஹிம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். புதிய படங்கள் வெளியாகாததால் இந்த படத்தை திரையரங்குகளில் நாளை முதல் வெளியிட உள்ளனர். ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் பொது இந்த படத்தை வெளியிடுவதற்கு நயன்தாரா வீட்டின் முன்பு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு நயன்தாரா தரப்பில் "வாசுகி படத்தை வெளியிடுவதற்கும் நயன்தராவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படத்தில் நயன்தாரா ஒரு நடிகை மட்டும் தான். இந்த படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளரிடமும், டப்பிங் உரிமையை வாங்கியவர்களிடமும், வெளியீட்டு உரிமையாளர்களிடம் தான் கேட்க வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய படங்கள் வெளியாகாததால் வெளிவரும் நயன்தாராவின் வாசுகி