நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

       பதிவு : Feb 27, 2018 10:04 IST    
Actress Nayanthara New Movie Kolamavu Kokila First Look Poster Release At March5th Actress Nayanthara New Movie Kolamavu Kokila First Look Poster Release At March5th

நடிகை நயன்தாரா நடிப்பில் இறுதியாக அறம், வேலைக்காரன் போன்ற படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நயன்தாரா, 'பில்லா 2' படத்தை இயக்கிய இயக்குனர் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் 'கொலையுதிர் காலம்' படத்திலும், தெலுங்கில் நடிகர் ராம் சரண் தயாரிப்பில், இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் 'சயிரா நரசிம்ம ரெட்டி' படத்திலும், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'கோலமாவு கோகிலா' படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் இவருடைய நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'இமைக்கா நொடிகள்' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'கோலமாவு கோகிலா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 5-ஆம் தேதியும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் மார்ச் 8-ஆம் தேதியும் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் முன்னதாக விஜய் டிவியின் கிரியேட்டிவ் இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்க அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு தொகுப்பாளினி ஜாக்லின் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் தொகுப்பாளர் ஜாக்லின் திரைப்பட உலகில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

 

Nayanthara vijay TV Jaqueline Kolamavu Kokila Movie First Look Poster Release Date,  Image Credit - twitter (@LycaProductions)Nayanthara vijay TV Jaqueline Kolamavu Kokila Movie First Look Poster Release Date, Image Credit - twitter (@LycaProductions)
Nayanthara vijay TV Jaqueline Kolamavu Kokila Movie First Single Released At March 8th,  Image Credit - twitter (@LycaProductions)Nayanthara vijay TV Jaqueline Kolamavu Kokila Movie First Single Released At March 8th, Image Credit - twitter (@LycaProductions)

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக் போஸ்டர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்