ads

மோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்

மோகன்லால் பிறந்த நாளான இன்று நீராழி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மோகன்லால் பிறந்த நாளான இன்று நீராழி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டாரானா மோகனலால் பிறந்த தினமான இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 58வயதான இவர் தன்னுடைய 18 வயது முதல் கிட்டத்தட்ட 40 வருடங்களாக திரைத்துறையில் நடித்து வருகிறார். இந்த 40 வருடத்தில் இவர் 330 மலையாள படங்களிலும், தமிழில் 5 படங்களிலும், தெலுங்கில் 3 படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் 5 படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான வில்லன் படத்திற்கு பிறகு நீராழி, ஓடியன், காயம்குளம் கொச்சுண்ணி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. மேலும் தமிழில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவருடைய பிறந்த நாளான இன்று இவருடைய நடிப்பில் உருவாகி வரும் 'நீராழி' படத்தின் ட்ரைலரை படக்குழு பிறந்த நாள் பரிசாக வெளியிட்டுள்ளது.

இந்தி இயக்குனரான அஜோய் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மோகன்லால் சன்னி ஜியார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகை நதியாவுக்கு கணவராக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பார்வதி நாயர், சுராஜ் வெஞ்சாரமுத்து, சாய் குமார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்சாண்ட் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஸ்டிபன் தேவசி மற்றும் ரோனி ஆகியோரது இசையமைப்பில் திரில்லராக உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது.

மோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்