பிரபு தேவாவிடம் இணையும் நிக்கிகல்ராணி, தன்யா

       பதிவு : Nov 07, 2017 19:24 IST    
பிரபு தேவாவிடம் இணையும் நிக்கிகல்ராணி, தன்யா

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2002ல் வெளிவந்த 'சார்லி சாப்லின்' காமெடி படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராமன், லிவிங்ஸ்டன் மற்றும் சிலர் நடித்திருந்தனர். நல்ல வரவேற்புகள் இப்படத்திற்கு கிடைத்ததோடு பிரபுவிற்கு சிறந்த நடிகர் என்று தேசிய விருதும் வழங்கப்பட்டது.    

இதனை அடுத்து 'சார்லி சாப்லின் 2' படத்தினை உருவாக்க தொடங்கியுள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் பிரபு தேவா இரண்டு வேடத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திலும் அதிகளவு காமெடிகள் இறைந்திருக்கிறதாம்.   

 

இந்நிலையில் பிரபு தேவா ஜோடியாக நிக்கிகல்ராணி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இவர்களுடன் இணைந்து இரண்டாவது ஜோடியாக கருப்பன் தன்யா நடிக்கிறார். கிரேசி மோகன் வசனம் எழுதும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியுள்ளது.   


பிரபு தேவாவிடம் இணையும் நிக்கிகல்ராணி, தன்யா


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்