ads

ஏஎல். விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபு தேவா

ஏஎல். விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபு தேவா

ஏஎல். விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபு தேவா

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் பிரபு தேவா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்த பிரபு தேவா சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஏஎல் விஜய் இயக்கிய 'தேவி' படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார்.  

இதனை தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கி ஜெயம் ரவி நடித்திருந்த 'வனமகன்' படத்தினை பிரபு தேவா சொந்த நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ஏஎல். விஜய் இயக்கும் படத்தில் பிரபு தேவா நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்க இருக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிட படாதது குறிப்பிடத்தக்கது. பிரபு தேவா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று முதல் முதலாக மும்பையில் தொடங்கியிருக்கிறது.

மேலும் மும்பை சூட்டிங்கில் பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் இன்று பரவியது. இந்நிலையில் படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு, விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ். இசையமைப்பு பணியில் இணைந்துள்ளனர். 

பிரபு தேவா தற்பொழுது மெர்குரி, யங் மங் சங், குலேபகாவலி போன்ற படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.         

ஏஎல். விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபு தேவா