ads
பிரபு தேவா இரண்டு வேடங்களில் நடிக்கும் படத்திற்கு பூஜை
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 10, 2017 10:48 ISTபொழுதுபோக்கு
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2002ல் வெளிவந்த 'சார்லி சாப்லின்' காமெடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் முன்னதாகவே வந்திருந்தது. இதில் பிரபு தேவா இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும் இவருக்கு ஜோடியாக தற்பொழுது வளர்த்து வரும் நிக்கி கல்ராணி மற்றும் 'கருப்பன்' நாயகி தன்யா போன்றவர்கள் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் அம்ரிஷ் இசையமைப்பு மற்றும் சௌந்தரராஜன் ஒளிப்பதிவு பணியில் இணைந்துள்ளனர். இந்நிலையில் படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற உள்ளது.
பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார்.
தற்பொழுது பிரபு தேவா எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் யங் மங் ஷங், கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் மெர்குரி, சக்ரி டோலெட்டி இயக்கத்தில் காமோஷி, கல்யாண் இயக்கத்தில் குலேபகாவலி மற்றும் விஜய் இயக்கிவரும் பெயரிட படாத படம் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.