ads

நட்சத்திர விழாவில் இணைந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழு

oru nalla naal paathu solren audio launch in natchathira vizha 2018

oru nalla naal paathu solren audio launch in natchathira vizha 2018

புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பல வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், நிஹாரிகா கோனிடேலா, காயத்ரி சங்கர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் டீசரில் வெளிவந்த விஜய் சேதுபதியின் பல வித கெட்டப்புகள் ரசிகர்களிடம் வெகுவான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.  7சி என்டர்டைன்மெண்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த சிங்கிள் ட்ராக் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இம்மாதம் வெளிவர உள்ள இப்படத்தின் அனைத்து வித படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் இசையை விரைவில் வெளியிடுவதாக படக்குழு முன்பு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் இசையை ஜனவரி 6-இல் மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர விழாவில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நட்சத்திர விழாவில் கிட்டத்தட்ட 300 கும் மேற்பட்ட திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். மேலும் இந்த விழாவில் நடிகர் விஷாலின் 'இரும்புத்திரை' படத்தின் இசையை வெளியிட உள்ளனர்.

நட்சத்திர விழாவில் இணைந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழு