ads

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் டீசர்

oru nalla naal paarthu solren movie teaser

oru nalla naal paarthu solren movie teaser

இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் புகை படங்களை சமூக வலைத்தளங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.  இந்த படத்தில் டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மாறுபட்ட 8 வேடங்களில் நடிக்கிறார் என்று முன்பே தகவல்கள் வெளியானது. 

அதற்கேற்றாற்போல் நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்டு காணப்படுகிறார். ஒவ்வொரு வேடமும் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்திற்கு இப்போதே ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தை செவன் சி என்டர்டைன்மெண்ட் மற்றும் அம்மா நாராயணா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிகாரிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் டீசர்