ads

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

oru nalla naal pathu solren movie crews press meet stills

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் கவுதம் கார்த்திக் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தை புது முக இயக்குனராக ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் பிப்ரவரி 2-இல் உலகம்முழுவதும் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு உரையாடினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது "இயக்குனர் ஆறுமுககுமார் மிகவும் தெளிவான குணமுடையவர். அனைவரையும் சமமாக நினைத்து பழகக்கூடியவர். தனது முதல் படத்திலேயே இயக்கி தயாரித்துள்ளார். நடிகர் கவுதம் கார்த்திக் தனது திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கக்கூடியவர். இந்த படத்தில் அவர் நடித்ததற்கு பெருமை படுகிறேன். நடிகை காயத்ரி எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். இந்த வருடம் அவருக்கு நிச்சயம் புதுமையானதாக அமையும்." என்று தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து பேசிய நடிகர் கவுதம் கார்த்திக் "இந்த படத்தில் நான் ஹரிஷ் என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பழக்கம். இந்த படத்தில் என்னை பரிந்துரை செய்ததற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த படத்தின் மூலம் அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குனர் ஆறுமுக குமார் முதல் படத்திலே சிறப்பான படத்தை தந்துள்ளார். இந்த படத்திற்கு இசைஅமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் புதுமையான இசையை தந்துள்ளார்." என்று தெரிவித்துள்ளார்.

நடிகை காயத்ரி பேசும்போது "இந்த படத்தில் கோதாவரி என்ற பெயரில் கதாபாத்திரம் இருக்கு, நடிக்கிரையானு கேட்டாங்க. இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என்று முறையில் பதட்டமில்லாமல் ஆறுமுக குமார் ரொம்ப கூழாகவே இருந்தார். ஒட்டுமொத்த படக்குழுவினருடன் தலக்கோணம் காட்டில் பழக வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே அறிமுகமான முகங்கள் என்பதால் இந்த படம் நல்ல அனுபவமாக அமைந்துள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

oru nalla naal pathu solren movie crews press meet stillsoru nalla naal pathu solren movie crews press meet stills