பட்மன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

       பதிவு : Jan 20, 2018 12:54 IST    
pad man new release date pad man new release date

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகரான அக்க்ஷய் குமார்  பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தற்பொழுது தமிழில் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் அக்க்ஷய் குமார் வில்லன் கெட்டப்பில் களமிறங்கி ரசிகர்களை மிரள வைக்கும் விதமாக 12 வித வேடத்தை கையாண்டு இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் இப்படத்தின் போஸ்டர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்களிடம் வெகுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இப்படத்தினை தொடர்ந்து அக்க்ஷய் குமார் 'பட்மன்' என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கோயம்பத்தூர் நகரில் வாழ்த்து கொண்டிருக்கும் அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மைய்யமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தினை ஆர்.பால்கி என்பவர் இயக்கிவருகிறார்.   

இந்த படத்தில் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இவருடன் இணைத்து பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட சந்தன் அரோரா படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். ஹோப் புரொடக்ஷன்ஸ் - MRS FUNNYBONES மூவீஸ் - SPE ஃபிலிம்ஸ் இந்தியா- COLUMBIA பிக்சர்ஸ் - KRIRAJ எண்டர்டெயின்மெண்ட் போன்ற பல தயாரிப்பு நிறுவனம் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில்  ராதிகா ஆப்தே, சோனம் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தின் போஸ்டர், இசை, ட்ரைலர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்ததோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித் துள்ளது. இந்நிலையில் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ல் வெளிவர இருந்த இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு மாற்றி வரவிருக்கும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜனவரி 25ம் தேதியில் வெளிவர இருந்த 'பத்மாவதி' படத்திற்கு தற்பொழுது எந்த வித போட்டியும் இல்லாமல் வெளிவர உள்ளது. இந்நிலையில் 'பத்மாவதி' படக்குழு  அவர்களது ட்விட்டரில் 'பட்மன்' படக்குழுவிற்கு நன்றியை தெரிவித்து படத்தின் வெளியீட்டிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.     


பட்மன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்