ads

காலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்

காலா வெளியாக இருந்த ஏப்ரல் 27-ஆம் தேதியில் பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் உலகமே எதிர்பாத்திருக்கும் அவென்ஜர்ஸ் படமும் வெளியாக உள்ளது.

காலா வெளியாக இருந்த ஏப்ரல் 27-ஆம் தேதியில் பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் உலகமே எதிர்பாத்திருக்கும் அவென்ஜர்ஸ் படமும் வெளியாக உள்ளது.

தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பிறகு அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி மெர்குரி படத்தை தொடர்ந்து தற்போது ஏராளமான தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. இந்த பட்டியலில் சிறு பட்ஜெட் படங்கள் முதல் முன்னணி நாயகர்களின் படங்கள் வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளது. இதில் காலா, விஸ்வரூபம் 2, இரும்புத்திரை, டிக் டிக் டிக், கரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், மிஸ்டர் சந்திரமௌலி, பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, செம, கோலி சோடா 2 போன்ற ஏராளமான படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்த படம் தற்போது ரம்ஜானை முன்னிட்டு அடுத்த மாதம் ஜூன் 7-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தற்போது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'பக்கா' படமும், நடிகர் அரவிந் சாமி நடிப்பில் உருவாகியுள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படமும் காலா வெளியாக இருந்தத ஏப்ரல் 27-ஆம் தேதியில் வெளியாக உள்ளது.

இதில் நடிகர் அரவிந் சாமி மற்றும் நடிகை அமலா பால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்குனர் சித்திக் இயக்கி உள்ளார். இவர் முன்னதாக தமிழின் மாபெரும் வெற்றி படங்களான ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் போன்ற படங்களை இயக்கியவர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ள 'பக்கா' படத்தை அறிமுக இயக்குனரான எஸ் எஸ் சூர்யா இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நடிகை நிக்கி கல்ராணி, விக்ரம் பிரபுவுடன் 'நெருப்பு டா' படத்திற்கு இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். மேலும் இந்த படம் நடிகை நிக்கி கல்ராணியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி உலகமே பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கும் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War)' படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கும் தமிழ் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

காலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்