ads
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக கொண்ட மெரினா புரட்சி முதல் பார்வை
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jan 09, 2018 09:50 ISTMovie News
கடந்த 2009ம் ஆண்டில் வெளிவந்து சிறியவர் முதல் பெரியவர் வரை நல்ல வரவேற்பினை பெற்ற 'பசங்க' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கோலி சோடா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் ஐந்து படங்கள் பாண்டிராஜிக்கு சொந்தமான ‘பசங்க புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவரே தயாரித்திருப்பது குறிப்பிட்ட தக்கது. தற்பொழுது 'செம' படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் நாயகனாக இசையமைப்பாளர் மற்றும் நாயகனாக வளரும் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார். மேலும் பெயரிடப்படாத மற்றொரு படத்தினை இயக்கிவருகிறார். இதில் கார்த்தி நாயகனாக நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் 'பசங்க புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் சல்லிக்கட்டு புரட்சியை மையமாக வைத்து 'மெரினா புரட்சி' என புது படதினை தயாரிக்க உள்ளார். கடந்த ஆண்டில் இதே நாளில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் ஜனவரி 23ம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் சல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் டைட்டிலை அதே நாளில் (8.1.2018) நேற்று நடிகர் சிவகார்த்திகேயன், சூரி, சதீஸ் மூவரும் அவர்களின் ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளனர். தற்பொழுது இந்த டைட்டில் போஸ்டர் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் ட்ரைலரை விரைவில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.
புதுமுக இயக்குனர் எம்.எஸ்.ராஜ் இயக்கும் இப்படத்தில் அல்ருஃபியான் இசையமைக்க இருக்கிறார். இவருடன் இணைந்து ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஈடுபட தீபக் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.
adsடைட்டிலை வெளியிட்ட சூரி ''தமிழன்னா யாருன்னு இந்த உலகம் தெரிஞ்சுக்கிட்ட நாள் இன்னைக்கு! 10 கோடி தமிழர்களோட போராட்டத்தைப் படமா உருவாக்கியிருக்காங்க @pandiraj_dir அண்ணனோட @pasangaprodns .வாழ்த்துக்கள் இயக்குனர் M.S.ராஜ் & dop @VelrajR sir 👍#MarinaPuratchiFirstLook'' என்று பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து சதீஸ் ''பண்பாட்டைக் காப்பாற்ற தமிழன் போர் தொடங்கிய நாள் இன்று ! கலாச்சாரத்தைக் காக்க 10 கோடி தமிழர்கள் கண்ணியமுடன் நடத்திய போராட்டம் விரைவில் ...உங்கள் பார்வைக்கு ! முதல் பார்வை இன்று முதல்..''என்று பதிவி செய்துள்ளார்
ads
தமிழன்னா யாருன்னு இந்த உலகம் தெரிஞ்சுக்கிட்ட நாள் இன்னைக்கு!
— Actor Soori (@sooriofficial) January 8, 2018
10 கோடி தமிழர்களோட போராட்டத்தைப் படமா உருவாக்கியிருக்காங்க @pandiraj_dir அண்ணனோட @pasangaprodns .
வாழ்த்துக்கள் இயக்குனர் M.S.ராஜ் & dop @VelrajR sir 👍#MarinaPuratchiFirstLook pic.twitter.com/TEKbtQEUCn
பண்பாட்டைக் காப்பாற்ற தமிழன் போர்
— Sathish (@actorsathish) January 8, 2018
தொடங்கிய நாள் இன்று !
கலாச்சாரத்தைக் காக்க 10 கோடி தமிழர்கள் கண்ணியமுடன் நடத்திய போராட்டம் விரைவில் ...
உங்கள் பார்வைக்கு !
முதல் பார்வை இன்று முதல்..
Engal vaazhkkaiyai maatriyadhum #Marina dhan. Best wishes @pandiraj_dir sir & @pasangaprodns pic.twitter.com/6eUT2O8jt3
Pasanga productions @pandiraj_dir sir presents #MarinaPuratchi ..Reliving the historic moment..Best Wishes to the full team..Trailer soon 👍 pic.twitter.com/mZJBvHMm7p
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 8, 2018
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக கொண்ட மெரினா புரட்சி முதல் பார்வை
-   Tags : 
pasanga director pandiraj produced marina puratchi first look poster
pasanga director pandiraj produced marina puratchi
pandiraj produced marina puratchi
marina puratchi
marina puratchi first look
marina puratchi trailer coming soon
marina puratchi trailer
sathish
sivakarthikeyan
soori
மெரினா சல்லிக்கட்டு போராட்டதில் மெரினா புரட்சி
சல்லிக்கட்டு போராட்டதில் மெரினா புரட்சி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து புது பட தகவல்
இயக்குனர் பாண்டிராஜ் தயாரிக்கும் மெரினா புரட்சி
பசங்க இயக்குனர் தயாரிக்கும் மெரினா புரட்சி
பசங்க இயக்குனர் பாண்டிராஜ் தயாரிக்கும் மெரினா புரட்சி
பசங்க இயக்குனர் பாண்டிராஜ் தயாரிக்கும் புது பட தகவல்
மெரினா புரட்சி
மெரினா புரட்சி பஸ்ட் லுக் போஸ்டர்
மெரினா புரட்சி பஸ்ட் லுக்
மெரினா புரட்சி ட்ரைலர் விரைவில்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக கொண்ட மெரினா புரட்சி முதல் பார்வை
Related News
ads