மழையின்போது இதர ஜீவராசிகளையும் பாதுகாக்க வேண்டும் - விவேக் இனங்கல்

       பதிவு : Nov 02, 2017 05:30 IST    
மழையின்போது இதர ஜீவராசிகளையும் பாதுகாக்க வேண்டும் - விவேக் இனங்கல்

சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகள், சாலைகள் போன்ற இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையை சூழ்ந்துள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிவதால் சென்னை வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் ஆங்காங்கே மின் கம்பங்கள் விழுந்ததாலும், மழைநீர் தேங்கி இருப்பதாலும் உயிரிழப்புகள் நடக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

சிறந்த சமூக ஆர்வலர் மற்றும் நடிகரான விவேக் தனது நடிப்பின் மூலம் மக்களுக்கு சமூகம் சார்ந்த  கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இவர் சமூகத்தில் அதிக ஈடுபாடு உள்ளதால் ஆங்காங்கே மரங்களை மற்றும் மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவர் தற்போது தனது டிவிட்டரில்  மழையின்போது வாயில்லா ஜீவராசிகளையும் சேர்த்து பாதுகாக்க வேண்டும் அதற்கும் உணவு மற்றும் தண்ணீரையும் குடுத்து உதவுங்கள் என்று பதிவிட்டுள்ளார். நடிகர் விவேக்கின் இந்த மனதிற்கு சமூக ஆர்வலர்களும், ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


மழையின்போது இதர ஜீவராசிகளையும் பாதுகாக்க வேண்டும் - விவேக் இனங்கல்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்