நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் தங்கர் பச்சானின் 'களவாடிய பொழுதுகள்'

       பதிவு : Dec 06, 2017 11:38 IST    
kalavadiya pozhuthugal new movie kalavadiya pozhuthugal new movie

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'களவாடிய பொழுதுகள்', தமிழ் சினிமாவில் காதல் கலந்த மனதில் படியும்படியான கருத்துக்களை வைத்து இயக்குபவர் இயக்குனர் தங்கர் பச்சான், இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'களவாடிய பொழுதுகள்'.  இந்த படத்தின் படப்பிடிப்பு 2010-ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில் தயாரிப்பாளர் பிரச்சனையால் இந்த படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் சர்ச்சைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளது. 

இந்த படத்தில் பிரபு தேவா மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை பூமிகா நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளராக இந்த படத்தின் இயக்குனர் தங்கர் பச்சான் செயல்பட்டுள்ளார். இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அயங்கரன் இன்டர்நெஷனல் சார்பில் கருணா மூர்த்தி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 29-இல் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 


நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் தங்கர் பச்சானின் 'களவாடிய பொழுதுகள்'


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்