ads

பிரபு தேவாவின் புது பட தலைப்பு

al vijay prabhu deva next movie title

al vijay prabhu deva next movie title

கடந்த ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த தேவி படத்திற்கு நல்ல வரவேற்புகள் கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா ஒரு புதிய படத்தில் நடிப்பதாகவும் அதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் எடுக்கப்பட்டதகவும் தகவல்கள் முன்பு வெளிவந்துள்ளது.   

  ஐஸ்வர்யா ராஜேஷ்  நாயகியாக நடிக்கும்  இப்படத்தினை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கவுள்ளனர். இந்நிலையில் ஏ.எல்.விஜய் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக, பிரேமன் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவியை நாயகியாக வைத்து 'கரு' படத்தினை எடுத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரைலர் பிரபு தேவா சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார் என்பது குறிப்பிட்ட தக்கது.      

பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்திற்கு 'லட்சுமி' என்று படக்குழுவினர் தலைப்பினை வைத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தலைப்பிற்கான எந்த வித அதிகார பூர்வ அறிவிப்பும் படக்குழுவினரிடமிருந்து வெளிவராநிலையில் 12 பாடல்கள் இந்த படத்தில் இடம் பெறுவதாக கூறியுள்ளனர் 

பிரபு தேவாவின் புது பட தலைப்பு