ads

கரு ட்ரைலர் - பார்வையாளர் எண்ணிக்கையை வெளியிட்ட லைக்கா நிறுவனம்

lyca productions reveals karu trailer views

lyca productions reveals karu trailer views

வனமகன் படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார். நாக சவுரியா, வெரோனிகா அரோரா, ஆர்ஜே. பாலாஜி, சந்தன பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா என பலர் நடித்துள்ளனர்.        இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர், நடன இயக்குனரான பிரபு தேவா வெளியிட்டார். இந்நிலையில் கரு படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இது வரை படத்தின் ட்ரைலரை 1 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்திருப்பதாக படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் அவர்களது ட்விட்டரில் பதிவு செய்துள்ளது. மேலும் 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி எஸ் இப்படத்தில் இசையமைத்துள்ளார்.     

படத்தின் பஸ்ட் லுக், தற்பொழுது வந்த ட்ரைலர் போன்றவை பார்க்கும் போது புது வித தோற்றத்தில் உருவாகியிருப்பதாக தெரிகிறது. இதன் காரணத்தினால் படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.   

          

கரு ட்ரைலர் - பார்வையாளர் எண்ணிக்கையை வெளியிட்ட லைக்கா நிறுவனம்