பிரபு தேவாவிற்கு ஜோடியாகும் நாயகிகள்

       பதிவு : Nov 12, 2017 11:47 IST    
பிரபு தேவாவிற்கு ஜோடியாகும் நாயகிகள்

திரையுலகில் நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர், நடன ஆசிரியர் என பல திறமைகளை கொண்ட பிரபு தேவா தற்பொழுது பல படங்களில் நடித்து வருவத்தில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் பிரபு தேவா நடிப்பில் 2002ல் வெளிவந்த 'சார்லி சாப்லின்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளனர். இதில் நாயகனாக நடிப்பதற்கு பிரபு தேவா கமிட்டாகி இருக்கிறார்.   

நிக்கி கல்ராணி, தன்யா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிஷ் இசையமைப்பு மற்றும் சௌந்தரராஜன் ஒளிப்பதிவு பணியில் இணைந்துள்ளனர். படத்திற்கு பூஜை நடைபெற்று முதல் முதலாக படப்பிடிப்பு நேற்று கோவாவில் நடைபெற்றது. படப்பிடிப்பு நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வலைதளத்தில் நேற்று பரவியிருந்தது.  

 

இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக ஒரு நாயகியை இணைக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஹிட் அடித்த மாமா வெய்டிங் குத்து பாடலுக்கு நடனமாடிய அடா சர்மா தற்பொழுது தமிழ் திரையுலகில் 'சார்லி சாப்லின் 2' படத்தின் மூலம் நாயகியாக வளவரவுள்ளார்.     


பிரபு தேவாவிற்கு ஜோடியாகும் நாயகிகள்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்