பிரபுதேவாவின் மெர்குரி படத்தின் டீசரை வெளியிட்ட நான்கு பிரபலங்கள்

       பதிவு : Mar 07, 2018 17:15 IST    
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், பிரபு தேவாவின் த்ரில்லர் படமான மெர்குரி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், பிரபு தேவாவின் த்ரில்லர் படமான மெர்குரி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபுதேவா நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'குலேபகாவலி'. இந்த படத்தை தொடர்ந்த இவருடைய நடிப்பில் யங் மங் சங், லக்ஷ்மி, மெர்குரி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மெர்குரி'. இந்த படத்தை ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.

இந்த படம் அடுத்த மாதம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ், நிவின் பாலி, ராணா டகுபதி, கன்னட நடிகர் ரக்ஷித் ரெட்டி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் மொழியற்ற சைலன்ட் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசரில் மெர்குரியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்காக நினைவு சின்னம் இருப்பது போன்றும், சில காரணங்களுக்காக பிரபு தேவா பழி வாங்குவது போன்றும் அமைந்துள்ளது.

 

இந்த படத்தில் பிரபு தேவாவுடன், ரம்யா நம்பீசன், சனந் ரெட்டி, தீபக் பரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். த்ரில்லர் படங்களில் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதற்கு தகுந்தவாறு இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு பணிகளையும், விவேக் ஹர்சன் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற பணிகளை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மேற்கொண்டுள்ளார். இந்த படம் புதுவித முயற்சியாக அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 


பிரபுதேவாவின் மெர்குரி படத்தின் டீசரை வெளியிட்ட நான்கு பிரபலங்கள்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்