ads

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் ஜோடியான பிரபு தேவா தமன்னா

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் ஜோடியாக பிரபு தேவாவும், தமன்னாவும் இணைந்துள்ளனர்.

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் ஜோடியாக பிரபு தேவாவும், தமன்னாவும் இணைந்துள்ளனர்.

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பிறகு நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் 'உள்ளே வெளியே' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபு தேவா நாயகனாக நடிக்க தமன்னா நாயகியாக நடிக்க உளளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2016 இல் வெளியான 'தேவி' படத்தின் மூலம் பிரபு தேவாவும், தமன்னாவும் இணைந்து நடித்திருந்த நிலையில் மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளனர். தற்போது பிரபு தேவா நடிப்பில் யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல் போன்ற படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதில் இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கி வரும் 'பொன் மாணிக்கவேல்' படத்தின் டைட்டில் லுக்கும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

நடிகை தமன்னாவும் சீனு ராமசாமியின் 'கண்ணே கலைமானே' படப்பிடிப்பிற்கு பிறகு தெலுங்கில் 4 படங்களிலும் தமிழ் மற்றும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு இருவரும் இயக்குனர் பார்த்திபன் இயக்க உள்ள புதுப்படத்தில் இணைய உள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. 

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் ஜோடியான பிரபு தேவா தமன்னா