ads

எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

priya bhavani shankar new film updates

priya bhavani shankar new film updates

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதல் முறையாக மேயாத மான் படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக நடித்து திரையுலகில் நாயகியாக  அறிமுகமானார். இந்த முதல் படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து பிரபல நடிகர்களின் படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார். கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'ஜூங்கா' மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவதற்கு முன்னதாகவே மற்றொரு புது படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

இந்த புது படம் 'ஒரு நாள் கூத்து' இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாக உள்ளது. மேலும் இப்படத்தின் நாயகனாக இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்ஜே. சூர்யா இணைந்துள்ளார். மெர்சல், ஸ்பைடர் படத்தில் வில்லன் கெட்டப்பில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்ததை தொடந்து மீண்டும் நாயகனாக களமிறங்க உள்ளார். மேலும் இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள், கலை கலைஞர்கள், இதர நடிகர் - நடிகைகள் மற்றும் படத்தின் படப்பிடிப்பு போன்ற படத்தின் சம்மந்தப்பட்ட தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.          

எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்