கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு ரஜினிக்கு வெறும் 65 கோடி சம்பளமாம்

       பதிவு : May 03, 2018 11:42 IST    
ரஜினிகாந்த், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு 65 கோடி சம்பளமாக பெற உள்ளார். ரஜினிகாந்த், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு 65 கோடி சம்பளமாக பெற உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், காலா, 2.0 படங்களுக்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அடுத்ததாக இந்த படத்தில் நடிக்க உள்ள நாயகிகள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக உள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கு மட்டும் தற்போது 65 கோடி சம்பளமாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளதாக தகவல் வழங்கியுள்ளது. ஆனால் முன்னதாக தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் நடைபெற்ற போது முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளவும் தயாரிப்பாளர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ரஜினிகாந்த் வாங்கும் சம்பளத்தை பார்த்தால் தயாரிப்பாளர்கள் கோரிக்கை என்ன ஆயிற்று என்ற கேள்வி கேட்க தோன்றுகிறது.

 

இந்த செய்தி தற்போது நடிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் உள்ளார். அவர் இந்த வாரம் திரும்பி வந்ததும் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வரும் ஜூன் 7-ஆம் தேதி இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படம் வெளியாகவுள்ளது.


கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு ரஜினிக்கு வெறும் 65 கோடி சம்பளமாம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்