எந்திரன் 2.0 டீஸர் வெளியானதை பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த்

       பதிவு : Mar 05, 2018 12:17 IST    
அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்னர் ஆன்லைனில் வெளியானது ஊக்கப்படுத்தப்படக்கூடாது. photo credit soundarya rajnikanth @soundaryaarajni (twitter) அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்னர் ஆன்லைனில் வெளியானது ஊக்கப்படுத்தப்படக்கூடாது. photo credit soundarya rajnikanth @soundaryaarajni (twitter)

இயக்குனர் சங்கர் மூன்றாவது முறையாக நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்த திரைப்படம், எந்திரன் 2.0. மிகப்பெரிய பொருட்செலவில், மிகப்பிரம்பாண்டமாக எடுக்கப்படும் இப்படத்திற்கு,  மக்களால் மத்தியில் அதிக அளவில் இந்த வருடம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் எந்திரன் 2.0 முக்கியமான படமாகும். முன்னணி எழுத்தாளரான திரு ஜெயமோகன் இப்படத்தில், ஷங்கருடன் இணைந்திருப்பது முக்கியமானதாகும். இப்படத்தின் வெளியீடு தேதியும், டீஸர் வெளியீடு தேதியும் அதிகாரபூர்வ  அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் வெளியீடு தேதியோ,  டீஸர் வெளியீடு தேதியோ அதிகாரபூர்வ  அறிவிப்புகள் வெளியிடப்படாத இந்நிலையில், கடந்த  ஞாயிறு அன்று காலையில், எந்திரன் 2.0 டீஸர் இணையதளத்திலும், வாட்ஸாப்ப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.  இதனால் எந்திரன் 2.0 படக்குழுவினர்கள் அதிர்ச்சியும், வருத்தத்தையும் அளித்தது. 

 

சௌந்தர்யா ரஜினிகாந்த்,  நடிகர் ரஜினிகாந்தின் மகளான இவர், ட்விட்டரில் '
அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்னர் ஆன்லைனில் வெளியானது ஊக்கப்படுத்தப்படக்கூடாது! இது கடின உழைப்பு, முயற்சிகள் மற்றும் சில விநாடிகள் உற்சாகத்தை உருவாக்குபவர்களின் உணர்வுகளை புறக்கணிப்பது ஒரு இதயமற்ற செயலாகும்'  என்று தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார். தனுஷ்,  சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவரான இவரின் தயாரிப்பில், காலா என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பது குறிப்பிடப்படுவதாகும்.  


எந்திரன் 2.0 டீஸர் வெளியானதை பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்